SELANGOR

31 இடர்பாடுகளுக்கு உள்ளான தனியார் வீடமைப்பு  திட்டங்கள் புனரமைக்கப்படும்

புத்ராஜெயா, ஜூலை 10: கடந்த மே 1 முதல் 31 வரையிலான காலப்பகுதியில் 3,299 வீடுகளை உள்ளடக்கிய இடர்பாடுகளுக்கு உள்ளான மொத்தம் 31 தனியார் வீட்டுத் திட்டங்கள் புனரமைக்கப்படும் என்று உள்ளூராட்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் தெரிவித்தார்.

நிறைவு மற்றும் இணக்க சான்றிதழை (சிசிசி) 28 வீட்டுத் திட்டங்கள் பெற்றுள்ள நிலையில் மற்ற மூன்று திட்டங்கள் கட்டுமான அட்டவணையின்படி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என இடர்பாடுகளுக்குள்ளான மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீட்டுத் திட்டங்களின் சமீபத்திய நிலை குறித்து அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தற்போது 149 இடர்பாடுகளுக்கு உள்ளான தனியார் வீட்டுத் திட்டங்கள் மீட்டெடுக்கப் பட்டுள்ளன. இதில் 17,436 வீடுகள் RM15.2 பில்லியன் மதிப்புள்ளவை, அவை சிசிசி சான்றிதழ் பெற்றுள்ளன அல்லது கட்டுமான அட்டவணையின்படி சுமூகமான நிலைக்கு திரும்பியுள்ளது என அவர் கூறினார்.

டிசம்பர் 30, 2022 அன்று இடர்பாடுகளுக்கு உள்ளான மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீடமைப்பு திட்ட நடவடிக்கைக் குழு நிறுவப்பட்டது. இது நாட்டில் இடர்பாடுகளுக்குள்ளான மற்றும் கைவிடப்பட்ட திட்டங்களில் சிக்கலைத் தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தும் மற்றும்  வீடுகளுக்கான தகுதி சான்றிதழ்கள் பெறுவது வரை  தேவையான மூலோபாய அணுகுமுறையைக் கண்டறிந்து, நேர்மறையான சேவையை வழங்குவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

மே 31 நிலவரப்படி, 141 திட்டங்களில் இருந்து 124 திட்டங்களாக குறைந்துள்ளது என தாமதமான திட்டப் பிரிவுகளைப் பற்றி அக்மல் நஸ்ருல்லா கருத்து தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :