EKSKLUSIFELMEDIA STATEMENT

இதுவரை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன

கோலாசிலாங்கூர், ஜூலை 13: டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பானுக்கு மாநிலத்தை வழிநடத்தும் அதிகாரம் தொடர்ந்து வழங்கப்பட்டால், இந்த திட்டம் வலுப்பெறும் என்று சிலாங்கூர் கெடிலன் மகளிர் தலைவர் ரோசானா சைனல் அபிடின் நம்பிக்கை தெரிவித்தார்.

“பக்காத்தான் ராக்யாட் சிலாங்கூரைக் கைப்பற்றியபோது (2008)​​சிலாங்கூரின் பொருளாதாரத்தை மக்கள்மயப்படுத்தி எட்டு திட்டங்களைச் செயல்படுத்தினோம். அது பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் (ISP) கீழ் 46 திட்டங்களாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

“சரியான நிதி விவகாரங்கள், வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் ஊழல் இல்லாத் தன்மை ஆகிய அம்சங்கள் இருந்தால் மட்டுமே இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியும்,” என்று அவர் நேற்று இரவு பெர்மாதாங் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் எந்த இனத்தையும் ஒதுக்கி வைக்காமல் அனைவருக்கும் நியாயமான முறையில் மாநில வருவாயை பகிர்ந்தளிக்கிறது என்று விளக்கினார்.

மேலும், இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஆகஸ்ட் 12 அன்று நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் தற்போதுள்ள அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு வாக்காளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

“மக்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டால், தற்போதுள்ள அரசாங்கமே இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குச் சிலாங்கூரில் ஆட்சி செய்வதை உறுதிசெய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதியை வாக்களிக்கும் நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.


Pengarang :