ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  டெஸ்லாவின்  தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் சந்தித்தது உடனடி பலன் கிட்டியது

ஷா ஆலம், ஜூலை 15:  சிலாங்கூரில் டெஸ்லாவின் முதலீடு  அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், இது அரசாங்கத்தின் கொள்கைக்கான மற்றொரு  வெற்றியின் சான்று என குறிப்பிட்டார்  சிலாங்கூர்  காபந்து அரசின் மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.

சிலாங்கூரில் டெஸ்லாவின் முதலீடு மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும்  பொருளாதார செழிப்புக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்ட  அவர்.

எலோன் மாஸூக்கு  சொந்தமான மின்சார வாகன நிறுவனத்தின் நுழைவு மாநிலக் கொள்கையின் வெற்றியையும், ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமையின் ஸ்திரத்தன்மையையும் நிரூபிக்கிறது  என்றார்.

“சிலாங்கூர் அரசாங்கம் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது மற்றும் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா இன்க் உடன் சிலாங்கூரில் தலைமையகம், சேவை மையம் மற்றும் அனுபவ மையத்தைத் திறக்க வழிவகை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

“மலேசியப் பிரதமர் YAB டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் Tesla Inc இன் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மற்றும் கலந்துரையாடலில் YB செனட்டர் தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா தெங்கு ஜஃப்ருல், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், அத்துடன் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் YB Fahmi Fadzil கலந்துக் கொண்டது பலனளித்துள்ளது.

சிறப்பாகச் செய்தீர்கள், பதிவு செய்ததற்கு நன்றி” என்று  அவர்களுக்கு  நன்றி கூறி பாராட்டுதலையும் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) மூலம் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் மாநிலத்திற்கு அதிக முதலீட்டை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது என்றார்.

“ஆர்எஸ் 1 மூலம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை சிலாங்கூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் செழிக்கும், கடவுள் கருணையால் , சிலாங்கூர் டாருல் ஏஹ்சானுக்கு அதிக முதலீடு மற்றும் வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

எலோன் மஸ்க் க்குச் சொந்தமான மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா இன்க் அதன் தலைமையகம், சேவை மையம் மற்றும் அனுபவ மையத்தை இந்த ஆண்டு சிலாங்கூரில் திறக்க உள்ளது.

நேற்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  டெஸ்லாவின்  தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் சந்தித்து கலந்துரையாடி அதன் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது.


Pengarang :