ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேர்தல் பணியில் உதவுவதற்கு 9,602 போலீஸ்காரர்கள் ஆறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவர்

கோத்தா பாரு, ஜூலை 16- தேர்தல் பணிகளில் உதவுவதற்காக மொத்தம் 9,602 அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் ஆறு மாநிலங்களுக்கு அனுப்ப படவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாஸருடின் ஹூசேன் கூறினார்.

தேர்தல் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த காவல் படை உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பும் பணியை உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை ஒருங்கிணைக்கும் என்று அவர் சொன்னார்.

அந்த ஆறு மாநிலங்களுக்கும் கூடுதலாக 6,602 காவல் துறை உறுப்பினர்கள் அனுப்பப் படவுள்ளனர். குறிப்பாக சிலாங்கூர் மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் சுமார் 2,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள். திரங்கானு மாநிலத்தில் 2,048 பேரும் பினாங்கில் 63 பேரும் பணியில் ஈடுபடுவர் என்றார் அவர்.

வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், அடையாள மை மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த காவல்துறையினரின் எண்ணிக்கை போதுமானது என்று அவர் தெரிவித்தார்.

கிளந்தான் மாநிலத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பில் இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கிளந்தான் மாநிலத்தைப் பொறுத்த வரை 16 இடங்களில் மீது கூடுதல் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிளந்தான் போலீசார் கடந்த மே மாதம் தொடங்கி ஓப் சந்தாஸ் நடவடிக்கையைத் தொடக்கியுள்ளனர். குழப்பத்தை ஏற்படுத்த முனைவோரை அடையாளம் காணும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை கொள்ளப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :