ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

டான் ஸ்ரீ மொகிதீன் யாசின்  போன்ற ஊழல் வாதிகளிடம்  அதிகாரத்தை  கொடுப்பீர்களா   டாக்டர் மஸ்லி மாலிக்  கேள்வி ?

செய்தி ; – சு. சுப்பையா

சுங்கை பூலோ. ஜூலை. 17-  பெர்சத்து கட்சியின் தலைவரும், பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவருமான டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் தூய்மையானவர் இல்லை என்று  பகிரங்கமாக  குற்றம் சாட்டினார்  முன்னாள்  கல்வி அமைச்சரான  டாக்டர் மஸ்லி மாலிக்.

மொகிதீன் யாசின் கல்வி அமைச்சராக இருக்கும் போது செய்த ஊழலை  நான் கல்வி அமைச்சராக இருந்த போது  தொடர வேண்டுமா ?  அவர் கல்வி  அமைச்சராக இருந்த போது வழங்கிய  புரோஜெக்ட்டில் தோல்வி அடைந்த   நிறுவனத்திற்கு மீண்டும்  ஒரு  திட்டத்தை கொடுக்கும் படி  அவர்  என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் ஊழலுக்கு தொடர்ந்து விலை போக  முடியாது என்று மறுத்தேன். இதனை தொடர்ந்து தான் நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டேன்.

மொகிதீன் யாசினின்  ஊழலுக்கு துணை போக மறுத்ததால் துன் மகாதீர் அமைச்சரவையிலிருந்து என்னை வெளியேற்றினார் என்று நேற்று பாயா ஜெராஸ் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் இயந்திரத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில் டாக்டர் மஸ்லி மாலிக் அம்பலப்படுத்தினார்.

டான் ஸ்ரீ  மொகிதீன்  முடிந்தால் என் மீது வழக்கு தொடுக்கலாம் ! என்று சவால் விடுத்தார். ஒரு திட்டத்தில் தோல்வி அடைந்த  அதே  நிறுவனத்திற்கு மீண்டும் புதிய   புரோஜெக்ட்   கொடுக்க மறுத்ததால் என்னை அமைச்சரவையிலிருந்து நீக்கும் படி டான் ஸ்ரீ மொகிதீன்  நெருக்குதல் கொடுப்பதாக அப்போது என்னை தனது வீட்டுக்கு அழைத்து துன் மகாதீர் கூறினார்.

இச்சம்பவத்தின் போது என்னுடன் மகாதீர் மகன் முக்ரீஸ் மகாதீர், இப்போதைய மூடா தலைவர் சையிட் சீடேக் ஆகியோர் உடன் இருந்தனர் என்றும் அம்பலப்படுத்தினார்.

நாட்டுக்கு 4.7 பில்லியன்  செலவு கொண்ட ஒரு  திட்டத்தில் மாபெரும் தோல்வியை  அளித்த   நிறுவனத்திற்கு  மீண்டும் திட்டமா ? அவருக்கு வேண்டிய நிறுவனம் என்பதால் மீண்டும்  அதே நிறுவனத்திற்கு கொடுக்க சொன்னார். இதை செய்ய மறுத்ததால் அமைச்சரவையில் இருந்து  நான் நீக்கப்பட்டேன்.

தொடர்ந்து பேசிய அவர், அரசுக்கு தேவையான வாகனங்கள் வாங்குவது  தொடர்பான மற்றொரு   புரோஜெக்ட்  ”அதை தொடர்ந்து நிர்வகிப்பதற்கான ஒரு வலுவான பொருளாதார பலம் கொண்ட நிறுவனத்தை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்தது”. 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. ” இதில் நாசா மோட்டார் நிறுவனம் வலுவான முதலீட்டுடன் குறைந்த விலையில் நிர்வாகிக்க டெண்டர் செய்தது. நாசா மோட்டார் நிறுவனத்திற்கு  கொடுப்பது என்று அமைச்சரவை முடிவு செய்து விட்டது”.

ஆனால் அதன் பின் மொகிதீன் பிரதமராக இருந்த போது நிதி கேட்டு நாசா மோட்டார் நிறுவனத்திற்கு நெருக்குதல் கொடுத்துள்ளார். நாங்கள் முறையாக டெண்டர் மூலம் இந்த திட்டத்தை பெற்றுள்ளோம். அதனால் உங்களுக்கு  நிதி கொடுக்க முடியாது என்று நாசா மோட்டார் நிறுவனம் கூறி விட்டது.

இதனால் ” ஆத்திரம் அடைந்த   மொகிதீன்  அந்த டெண்டரை ரத்து செய்து அதிக விலையில் டெண்டர் செய்த நிறுவனத்திற்கு கொடுத்து அதிகார துஷ்பிரயோகம் ஊழலும் செய்தவர்”  டான் ஸ்ரீ மொகிதீன் யாசின். பெரிக்காத்தான் ஊழல் மலிந்த கூட்டணி என்று டாக்டர் மஸ்லி மாலிக் குற்றம் சாட்டினார்.

இப்படி டான் ஸ்ரீ மொகிதீன்  கோவிட் அவசரக் காலத்திலும் நாட்டு மக்களின் வரி பணத்தில் ஊழல் செய்த கூட்டணியான   பெரிக்காத்தானுக்கு  வாக்களித்து சிலாங்கூர் அரசாங்கத்தை ஒப்படைக்க போகிறீர்களா என்று வந்திருந்த தொண்டர்களை பார்த்து கேட்டார். ஊழல் வாதிகளிடம் சிலாங்கூரை ஒப்படைக்க மாட்டோம் என்று உரக்க கத்தினர்.

மேலும் பாஸ் கட்சி ஆட்சி செய்து வரும் கெடா , கிளாந்தான், திரங்கானு மாநிலங்கள் எந்த வித முன்னேற்றங்களும் இல்லை. இப்படி இருக்க சிலாங்கூரை பாஸ் கட்சியிடம் ஒப்படைக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பாயா ஜெராஸ் தேர்தல் இயந்திரத்தை சேர்ந்தவர்கள் பாஸ் கட்சிக்கும் கண்டிப்பாக வாக்களிக்க மாட்டோம் என்று பதில் அளித்தனர்.

இதே போல் பாஸ் கட்சியை சேர்ந்த கெடா மாநில மந்திரி புசார் சனுசி சிலாங்கூர் சுல்தானை அவமதித்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். இனம், மதம், அரண்மனை குறித்து உணர்ச்சிவசப்படக் கூடிய பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்ற தடையை மீறி பாஸ் கட்சி பேசி வருகிறது.

சிலாங்கூர் மக்கள் பெரிக்காத்தானை புறக்கணிக்க வேண்டும் என்று மஸ்லி மாலிக் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக பாயா ஜெராஸ் தொகுதியின் ஒற்றுமை தேர்தல் இயந்திரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.


Pengarang :