ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவின் உண்மையான அடையாளத்தை ஒற்றுமை அரசின் கட்சிகள் பிரதிநிதிக்கின்றன- ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூலை 22 – பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல்  கூட்டணி உள்பட ஒற்றுமை அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகள் மலேசியாவின் உண்மையான அடையாளத்தைப் பிரதிநிதிக்கின்றன.

வரும் ஆகஸ்டு 12ம் தேதி நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில், இரு கூட்டணிகளை பிரதிநிதிக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு வலியுறுத்திய போது  பாரிசான்  தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி இவ்வாறு கூறினார்  .

சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான் மற்றும் திராங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது

மலேசியாவின் உண்மையான முகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அணியை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று நேற்றிரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பாரிசான் வேட்பாளர் அறிவிப்பின் போது ஜாஹிட்  கூறினார்.

எங்களிடம் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பூர்வ குடியினர் போன்றவர்கள் உள்ளனர்.  தேர்தலில் எங்களுக்கு ஆதரவளிப்பதற்காக சபா மற்றும் சரவாக்கில் உள்ள எங்கள் நண்பர்களும்  தீபகற்ப மலேசியாவுக்கு வருவார்கள் என அவர் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான  முயற்சியில் இன மற்றும் மத உணர்வுகளோடு விளையாடும் எந்தவொரு கட்சியையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக நிலைத்தன்மைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஜாஹிட் கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மாநிலங்களுக்கும் தலைமை தாங்குவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதற்கிடையில், கடந்த நவம்பரில் நடைபெற்ற 15 வது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்வியினால் பாரிசான் நேஷனல் கூட்டணியின் கௌரவத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை மீட்டெடுப்பதற்கு வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்கள்  வாய்ப்பளிக்கிறது என்றும் அம்னோ தலைவருமான அவர் கூறினார்.


Pengarang :