ECONOMYMEDIA STATEMENT

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வெ.50,000 வரை கடன் உதவி- ஹிஜ்ரா வழங்குகிறது

ஷா ஆலம், ஜூலை 25- தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்பும் வர்த்தகர்கள் ஹிஜ்ரா அறவாரியத்தின் ஐ-பிஸ்னஸ் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு 50,000 வெள்ளி வரை கடனுதவி வழங்கப்படுவதாக ஹிஜ்ரா அறவாரியம் தெரிவித்தது.இந்த ஐ-பிஸ்னஸ் திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் சேர்ந்த வணிகர்கள் பயன் பெறலாம். ஆர்வமுள்ளோர் www.hijrahselangor.com  எனும் அகப்பக்கம் வாயிலாக முழு விவரங்களைப் பெறலாம்.

வணிகர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப கடனுதவி வழங்கப்படுகிறது. எளிதான, விரைவான மற்றும் சுமையிலாத விண்ணப்ப முறையின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படுகிறது என அந்த வாரியம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இந்த ஐ-பிஸ்னஸ் திட்டத்திற்கு http://mikrokredit.selangor.gov.my/  என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.

ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்தை தரம் உயர்த்துவதற்கு அதிகமான தொழில் முனைவோருக்கு உதவுவதற்கு ஏதுவாக அந்த அறவாரியத்திற்கு 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 13 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஐ-பிஸ்னஸ் தவிர்த்து ஐ-பெர் மூசிம், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள் ஏசான் (நாடி), ஐ-அக்ரோ, -லெஸ்தாரி மற்றும் கோ டிஜிட்டல் ஆகிய கடனுதவித் திட்டங்களை ஹிஜ்ரா அறவாரியம் அமல்படுத்தியுள்ளது.


Pengarang :