ECONOMYSELANGOR

உலு சிலாங்கூரில் மெகா சாலை மேம்பாடு  திட்டத்தை இன்ஃப்ராசெல் தொடர்கிறது

ஷா ஆலம், ஜூலை 25: உலு சிலாங்கூரில் இன்ஃப்ராசெல் நிறுவனத்தால்   பெரிய அளவிலான சாலை மேம்பாட்டு பணி நேற்று தொடர்ந்தது. ஜாலான் எஸ்.கே.சி ஶ்ரீ கிளாடாங், உலு பெர்ணம் உத்தார ஆகியவற்றில் பழுதடைந்த , சாலைகளை  மேம்படுத்துவதாக  மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் அறிவித்தது.
பெர்சியாரான் புஞ்சாக் 6 மற்றும் பண்டார் புஞ்சாக் ஆலமில், நேற்று  சாலை  சீரமைப்பு பணிகள் தொடங்குவதற்கான தொடக்க  பணியும் மேற்கொள்ளப் பட்டதாக அவர் கூறினார்.
ஜூலை 9 அன்று, உள்கட்டமைப்பு EXCO, 94.9 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ஒன்பது
மாவட்டங்களில் சாலைகள் பெரியளவில் சேதமடைந்துள்ளதாகவும்,  அதனை மேம்படுத்துவதற்கான  25 சதவீத  வேலைகள் நிறைவடைந்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊராட்சி  சாலைகள், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை
மற்றும் மாவட்ட நிலை சாலைகள்  உட்பட 118 சாலைகளை, திட்டமிட்டபடி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலத்தின்
சாலைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக RM50 மில்லியன் நிதி ஒதுக்கீடு உடன்  பெரிய அளவிலான திட்டம்  இது என்றார்.

Pengarang :