MEDIA STATEMENTSELANGOR

ஒற்றுமை – புரிந்துணர்வுடன்  வலுவாக திகழ்கிறது ஒற்றுமை கூட்டணி.

[செய்தி ;- சு.சுப்பையா

ஷா ஆலம். ஆகஸட் 1– நம்பிக்கை கூட்டணியும் தேசிய  முன்னணியும் நல்ல புரிந்துணர்வுடன் ஒற்றுமையுடன் 6 மாநில தேர்தலை எதிர் நோக்குகிறது. ஒரு தொகுதியில் கூட இரண்டு கூட்டணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளவில்லை. இதன் வழி இந்த இரண்டு கூட்டணிகளும் நாட்டில் வலுவான கூட்டணிகள் என்பதை நாம் நிரூபித்து விட்டோம் என்று சிலாங்கூர் மாநில அளவில் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீட்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் ஒன்று சேர கூறினர்.

ஷா ஆலம் செக்சன் 7 லில் உள்ள ராஜ மூடா பொது மண்டபத்தில் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீடு கண்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தலைமை ஏற்றார். அவருடன் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணித் தலைவர் டத்தோ வீரா மெகாட் சூல்கர்னையின், சிலாங்கூர் அமானா தலைவர் ஹஷிம், சிலாங்கூர் மாநில ஜ.செ.க. தலைவர் கோபிந் சிங் டியோ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மந்திரி புசார் உரையாற்றுவதற்கு முன் இவர்கள் மூவரும் தேர்தல் பரப்புரை செய்தனர். அப்போது இந்த இரண்டு கூட்டணிகளும் ஒற்றுமையுடன் வலுவாக திகழ்கிறது என்று தொண்டர்களை உற்சாக படுத்தும் வண்ணம் கூறினர்.

2020 ல் பக்காத்தான் ஹரப்பான் மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருந்த போது நமது நம்பிக்கை கூட்டணியின் அரசை ஒரு  கோடாரி  காம்பு  ( அஸ்மின் ) கவிழ்க்க மூளையாக இருந்த போதும் சிலாங்கூர் மாநில அரசை வலுவாகவும் ஒற்றுமையுடனும் வழி நடத்தினார் மந்திரி புசார் என்று புகழாரம் சூட்டினார் கோபிந் சிங்.

சிலாங்கூரில் நமது கூட்டணி ஒற்றுமை நிலைக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் எதிர்க்கட்சிகள். சிலாங்கூரின் ஒற்றுமை அரசு மலர்வதற்கு 8 மாதங்களுக்கு முன்பே மத்தியத்தில் வலுவான 19 கட்சிகள் ஒன்றிணைந்த ஆட்சி வலுவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் வலுவான ஒற்றுமை அரசு தொடர்ந்து நின்று நிலைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

நமது ஒற்றுமையை கண்டு எதிர் கட்சிகள் அச்சம் கொண்டுள்ளன. இதனால் எதிர் கட்சிகள் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இந்த அவதூறுகளை முறியடித்து வலுவான ஒற்றுமை அரசை சிலாங்கூரில் நிலை நாட்டுவோம் என்று மெகாட் சூளுரைத்தார்.

சிலாங்கூரில் வலுவான ஒற்றுமை அரசு உருவாக தொண்டர்கள் நமது அனைத்து வேட்பாளர்களையும் கட்சி பாரபட்சம் இன்றி வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அமானா தலைவர் ஹஷிம் கேட்டுக் கொண்டார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்வீர்களா? என்ற கேள்விக்கு செய்வோம் என்று பெரும் கர கோசத்துடன் செய்வோம் என்று குரல் எழுப்பினர்.

ஒட்டு மொத்தத்தில் இந்த தேர்தல் கொள்கை பொதுக்கூட்டம் மிகவும் ஆரவாரத்துடன், உற்சாகத்துடன் நடந்தது என்றால் அது மிகையாகாது


Pengarang :