ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

மக்களின் ஒற்றுமை மேம்பாடுக்காக ஹரப்பான் -பாரிசான் நேசினல் இணைந்து வேலை செய்யும்

செய்தி மா. சிவகுமார்

தஞ்சோங் காராங்  ஜூலை 31 ;- தஞ்சோங் காராங் சாவா செம்பாடான்  கம்பத்தில் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் ஒன்று கலை நிகழ்ச்சியுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது.  உணவு விருந்துடன் நடைபெற்ற இத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முக்கிய அம்சமாக அத்தொகுதி பாக்காத்தான் ஹரப்பானை பிரதிநிதித்து களமிறங்கும் பெர்மாத்தாங் தொகுதி  வேட்பாளர்  யாஹ்யா சாரி பின் மாட் சாரி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.

தான் முதல் முறையாக, பிறந்த மண்ணில் பாக்காத்தான் ஹரப்பானை பிரதிநிதித்து போட்டியிடுவதாகவும், அதனால் இங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது எனக்கு ஓரளவிற்கு தெரியும்.  சில திட்டங்களை நான் என்  கவனத்தில் வைத்துள்ளேன்  என்றார்.

இங்கு வாழ்பவர்கள் அனைவரும் நெல் வயல்  வைத்திருக்கிறீர்கள்,  பருவக் காலத்தின்  சில சமயங்களில்  நீரோட்டம் காய்ந்து போவதால் இங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு தீர்வு காண வேண்டியது எனது முக்கிய பணியாகும் என்றார்.

அதே சமயம் கிராமத்தில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், இங்கு  புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி  தர வேண்டும்.  அதற்கான வேலையில் இறங்க உள்ளேன். சிறு வியாபாரிகளுக்கு எந்த மாதிரியான  வியாபாரம் செய்தால் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் என்று திட்டம் வகுத்துள்ளேன். அதே சமயம் கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு என்னென்ன ஊக்குவிப்பு செய்யலாம் என்பதற்கான திட்டங்களையும்  கொண்டுள்ளேன்  என்றார்.

முன்பு பாரிசான் நேசினலும், பாக்காத்தான் ஹரப்பான் கட்சியும் பிரிந்து இருந்தோம் ஆனால் நாங்கள்  மக்களை  ஒற்றுமையாக வைத்திருக்க பாடுபட்டோம்.   ஆனால்   இப்பொழுது  மக்களிடம்  வெறுப்பை  வளர்க்க சிலர்  பாடுபடுகிறார்கள்.. அதனால்  நாட்டுக்கும்  மக்களுக்கும்  பெரிய  இழப்பு  ஏற்படும்.

ஆதலால்,  இன்று  பாக்காத்தான் ஹரப்பான் கட்சியும் பாரிசான் நேசினல் கட்சியும் ஒன்றாக இணைந்து விட்டதால் எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது.  சுணங்கி இருந்த  பல வேலைகளை  இப்பொழுது செய்ய முடியும்   என்றார்.

இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட்டால் எதையும் எதிர்பார்க்காமல் அதற்கு  தேவையான  நடவடிக்கைகளில் இறங்குவோம். அதுமட்டுமின்றி  இரண்டு கட்சியினரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் என்றும் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை புரிந்த  தஞ்சோங் காராங் பாரிசான் நேசினல் அம்னோ தலைவர் டத்தோ சுலைமான், மற்றும் பாரிசான் நேசினல் தஞ்சோங் காராங் அம்னோ தலைவி  டத்தோ அபிபாபாவும் தமது உரையில்  தெரிவித்தனர்.

சுமார் இரவு 9.00 -மணியளவில் தொடங்கிய இத்தேர்தல் பிரச்சார கூட்டம் நள்ளிரவு 12:00 -மணிக்கு  நிறைவு அடைந்தது.


Pengarang :