ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் 2025க்குள் முற்றுப் பெறுவது உறுதி செய்யப்படும்

ஷா ஆலம், ஆக 2– சிலாங்கூரில் வெள்ளப் பிரச்சனைக்கு முழுமையானத் தீர்வு காணப்படுவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. இதன் அடிப்படையில் அது அனைத்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்து வருகிறது.

சிலாங்கூர் உள்பட நான் மாநிலங்களில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று சிலாங்கூர் அரசு 85 வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் 25 திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது.

இவற்றில் 25 திட்டங்கள் முழுமையாகப் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய திட்டங்கள் அமலாக்கம், வடிவமைப்பு, ஆலோசக நிலையிலான திட்டமிடல் அளவில் உள்ளன என்று அடிப்படை வசதிகள், பொது வசதி மற்றும் நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

சுமார் 111 கோடி வெள்ளி மத்திய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டிலான இத்திட்டங்கள் யாவும் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் கட்டங் கட்டமாக பூர்த்தி செய்யப்படும்  அவர் தெரிவித்தார்.

மொத்தம் 73 திட்டங்களை மேற்கொள்வதற்கு மாநில அரசு 61 கோடியே 50 லட்சம் வெள்ளியை வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையிடம் வழங்கியுள்ளது. மேலும் எட்டு திட்டங்களுக்கு வடிகால் அறங்காப்பு நிதியிலிருந்து 4 கோடியே 14 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 45 கோடியே 52 லட்சம் வெள்ளியை வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையிடம் ஒப்படைத்துள்ளது. ஆறுகள், நீர் சேகரிப்பு குளங்கள், மதகுகள் உள்ளிட்ட திட்டங்களை பிரதானமாகக் கொண்டு இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று இஷாம் தெரிவித்தார்.

இவை தவிர, ஊராட்சி மன்றங்களுடனும் இணைந்து வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், உதாரணத்திற்கு  அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு வடிகால்கள்  பம்ப் ஹவுஸ், வெள்ள நீர் சேகரிப்பு குளங்களை மேம்படுத்துவதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் 30 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்றுச் சொன்னார்.


Pengarang :