ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சூப்பர்மேன் போல் சுறுசுறுப்புடன் செயல்படும் சுங்கை ராமால் வேட்பாளர்

காஜாங், ஆக 2- மக்கள் பிரச்சனைகளைக் களைவதற்கு களமிறங்குவதில் காட்டும் சுறுசுறுப்பின் வழி சுங்கை ராமால் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் மக்கள் நாயகனாக சித்தரிக்கப்படுகிறார்.

புகார்களை நேரடியாகவோ சமூக ஊடகங்கள் வாயிலாகவோ பெற்றவுடன் அவற்றைத் தீர்ப்பதற்கு மஸ்வான் ஜோஹார் மிகவும் விரைந்து செயல்படுவதை தாம் நேரில் கண்டதாக சிறிய அளவில் மீன் வளர்ப்புத் தொழிலிலில் ஈடுபட்டு வரும் முகமது சாம் மானாப் (வயது 47) கூறினார்.

ஒய்.பி.(மாண்புமிகு) என்னைப் போன்றவர்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் வேலை இன்றி சிரமப்பட்ட போது மீன் வளர்ப்பில் ஈடுபடுவதற்கு எனக்கு மூலதன  உதவியை வழங்கினார். எனது குடும்பத்தின் தேவையை நிறைவு செய்ய அந்த வருமானம் போதுமானதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

உண்மையில் அவர் வேலை செய்யக்கூடிய சட்டமன்ற உறுப்பினர். நான் அறிந்தவரை அவர் ஒரு மின்னல். ஒரு சூப்பர் மேன். இதனை நான் நேரில் கண்டுள்ளேன். மற்றவர்களாக இருந்தால் புகார் கிடைத்த மறுநாள் அல்லது நாளை மறுநாள் வருவார்கள். ஆனால் மஸ்வானைப் பொறுத்த வரை காலையில் புகார் கிடைத்தால் மதியமே வந்து விடுவார் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முகமது சாமின் நிலை குறித்து தெரியவந்த போது அவருக்கு உதவும் வகையில் அந்த இடத்தை சமூக வேளாண் பகுதியாக தாம் மாற்ற தாம் உவியதாக மஸ்வான் சொன்னார்.

முகமது சாம் என்னிடம் வேலை தேடி வந்தார். இப்போது அவர் மீன் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது ஓரளவு  வருமானமும் வருகிறது என்றார்  அவர்.


Pengarang :