ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வர்த்தகரின் மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

புத்ராஜெயா, ஆக 2 – மொத்தம் 9.528 கிலோ  கஞ்சா கடத்திய குற்றத்திற்காக வர்த்தகர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து, தனக்கு எதிரான மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி 38 வயதான முகமது  பிர்டாவுஸ் மோஹ்சின் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் டத்தோ ஹட்ஹாரியா சைட் இஸ்மாயில், டத்தோ சீ மீ சுன் மற்றும் டத்தோ அஸ்மி அரிஃபின் ஆகியோர் அடங்கிய  மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.

 இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முகமது பிர்டாவுஸிற்கு  எந்த தகுதியும் இல்லை என்று  நீதிபதி ஹட்ஹாரியா  தீர்ப்பை வழங்குகையில் கூறினார்.முகமது பிரவுஸ் தண்டனை உறுதி செய்யப்பட்டது பாதுகாப்பானது என்று அவர் கூறினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இரவு 10.00 மணியளவில் உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள காஜாங் கே.டி.எம்.பி. ரயில் நிலையத்திற்கு எதிரே ஜாலான் புக்கிட் சாலையோரம் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக ஷா ஆலம் உயர் நீதிமன்றம்  கடந்த டிசம்பர் 3, 2021 அன்று  பிர்டாவுஸிற்கு மரண தண்டனை விதித்தது . தன்னை நிரபராதி என நிரூபிப்பதற்கு முகமது பிர்டாவுஸிற்கு இருக்கும் ஒரே வழி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதாகும்.


Pengarang :