EKSKLUSIFELMEDIA STATEMENT

மலேசியா-இந்தியா ஒத்துழைப்பு இலக்கவியல் பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்- இந்தியத் தூதர் நம்பிக்கை

கோலாலம்பூர், ஆக 9- மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பல்வேறு துறைகளில் குறிப்பாக இலக்கவியல் பொருளாதாரத்தில் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான வாய்ப்புகளை இரு நாடுகளும் கண்டறிய முடியும் என்று மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி கூறுகிறார்.  

தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) 2.0இல் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் அதிகமான இலக்கவியல் பொருளாதார வாய்ப்புகள் உள்ளதாக அவர் சொன்னார். 

ஐ.டி.2.0  எண்ண உரு ஐ.டி.10ஐ விட மாறுபட்டது. ஐ.டி. 2.0க்கு மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நாம் செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆப் திங்ஸ், கிளவுட் கம்யூட்டிங் போன்ற பரிணாமங்களை உருவாக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பகுதிக்கான முக்கிய சிறப்பம்சங்கள் என்னவென்றால் திறன் மேம்பாடு, இரு தரப்பு முதலீடு ஆகும். அதே சமயம் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆற்றலைக் கொண்டிருப்பது மற்றும் இலக்கவியல் பொருளாதாரத்திற்கு தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவையாகும் என்றார் அவர்.

தி கோலாலம்பூர் எக்கோனோமி கிளப் மற்றும் ஸ்டார் மீடியா குரூப் ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற விரிவுரை தொடரில் கலந்து கொண்ட ரெட்டி, ”இந்தியா-மலேசியா உறவு- உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் இந்தியாவின் விவேக நிலைப்பாட்டிற்கு மத்தியில் முன்னோக்கி நகர்தல்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

இலக்கவியல் பொருளாதார இலக்கை அடைவதற்கு ஏதுவாக மலேசியா-இந்தியா இலக்கவியல் மன்றத்தை அமைப்பதற்கான சாத்தியம் உள்ளதாக தமதுரையில் குறிப்பிட்ட அவர், ஃபின்டெக் கூட்டுத் திட்டத்தை மேற்கொள்ளவற்கான வாய்ப்புகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையே சுகாதாரத் துறையில் குறிப்பாக தடுப்பூசி தயாரிப்பு, பாரம்பரிய மருத்து கண்டுபிடிப்ப மற்றும் மருத்துவச் சுற்றுலாத் துறைகளில் வியூகப் பங்காளித்துவத்தை உருவாக்குவதற்கான சாத்தியத்தையும் இந்தியா ஆராய்ந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :