ECONOMYEKSKLUSIFNATIONAL

மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் பக்கத்தான்-பாரிசான் கூட்டணி வெல்லும்- மந்திரி பெசார் நம்பிக்கை

ஷா ஆலம், ஆக 9- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணி மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்று மாநில அரசை அமைக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இம்மாநிலத்தில் உள்ள 56 தொகுதிகளில்  38 முதல் 40 தொகுதிகள் வரை இக்கூட்டணி கைப்பற்றும் அதேவேளையில் பாரிசான் நேஷனல் ஆறுக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் வெற்றி கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் சிலாங்கூரில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி 40 இடங்களையும் (பிகேஆர்-19, ஜசெக-15, அமானா-6) பாரிசான் ஐந்து இடங்களையும் பார்ட்டி பங்சா மலேசியா இரு இடங்களையும் பெஜூவாங், வாரிசான், பாஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்தையும் வைத்திருந்தன.

ஆறு மாதங்களுக்கும் மேலாக சட்டமன்றத்திற்கு வரத் தவறிய காரணத்தினால் பத்தாங் காலி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுடன் கோல திரங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.


Pengarang :