ECONOMY

மெத்தனப் போக்கிற்கு இடமில்லை என்பது சிலாங்கூர் தேர்தல் முடிவுகள் வழி நிரூபணம்- ஜூவாய்ரியா கூறுகிறார்

ஷா ஆலம், ஆக 14- நடப்பு அரசு நிர்வாகம் மீது வாக்காளர்கள் பொதுவில்
திருப்தி கொண்டுள்ள அதே வேளையில் மெத்தனப் போக்கை அவர்கள்
ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது சிலாங்கூர்
மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின் வழி தெரிய வந்துள்ளது என்று உலு
கிளாங் தொகுதியில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த பக்கத்தான்
ஹராப்பான் வேட்பாளரான ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
முறையாக சேவையாற்றாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை கடந்த
12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன என்று சமூக
ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் பதிவுகளில் மந்திரி
பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளருமான அவர்
தெரிவித்தார்.
ஹராப்பான் மெத்தனப் போக்குடன் இருக்கக் கூடாது என அவர்கள்
விரும்புகின்றனர். வாக்காளர்கள் இப்போதெல்லாம் கட்சியை
அடிப்படையாக கொண்டு மட்டும் வாக்களிப்பதில்லை. வேட்பாளர்களின்
சேவைகளையும் கருத்தில் கொள்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
முறையாக சேவையாற்றாதவர்களை அவர்கள் தண்டித்து விடுகின்றனர்.
அவர்களுக்கு புதிய முகங்கள், புதிய நம்பிக்கை தேவைப்படுகிறது என்றார்
அவர்.  மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி
34 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் மூன்றில் இரு மடங்கு
பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பினை ஆளும் மாநில அரசு
தவறவிட்டது.

Pengarang :