ELNATIONALSI

கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களின் ஒருமித்தக் குரலாக ஒலிப்போம்- அமிருடின் உறுதி

ஷா ஆலம், ஆக 14- அரசியல் கட்சி வேறுபாடின்றி சிலாங்கூரிலுள்ள
ஒவ்வொரு பிரஜையின் குரலாக மாநில ஒற்றுமை அரசாங்கம் ஒலிக்கும்
என்று முன்னாள் மந்திரி புசார் உறுதியளித்துள்ளார்.
இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்-
பாரிசான் நேஷனல் கூட்டணி மாநிலத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக்
கொண்டதைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த உறுதி
மொழியை வழங்கினார்.
நாங்கள் மக்கள் குரலாக இருப்போம். அரசியல் சித்தாந்த வேறுபாடின்றி
மாநில மக்களை  அனைவரையும் நாங்கள் தற்காப்போம் என அவர் தனது
பேஸ்புக் பதிவில் கூறினார்.  எவரும் கைவிடப்பட மாட்டார்கள். மாநிலம் மற்றும் மக்களின் சுபிட்த்தை  உறுதி செய்வதற்கு நாங்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என அவர்
தெரிவித்தார்.
அதே சமயம், மக்கள் வழங்கிய ஆணையை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதோடு மாநிலத் தேர்தலை காரணமாக வைத்து  நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருவருக்கொருவர்  பகைமை பாராட்டக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மொத்தம் 56 தொகுதிகள் கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில் 34 இடங்களைப் பெற்றதன் மூலம் மாநில பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான்   நேஷனல் அரசாங்கம் தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
எனினும், எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனலிடம் 22 இடங்களைப்
பறி கொடுத்த காரணத்தால் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையைப்
பெறும் வாய்ப்பினை அது நழுவ விட்டது.

Pengarang :