ECONOMYEKSKLUSIF -MEDIA STATEMENT

ஏசான் ரஹ்மா விற்பனையில் மலிவான விலையில்  தரமானப் பொருட்கள்- பொதுமக்கள் மகிழ்ச்சி

ஷா ஆலம், ஆக 19- அத்தியாவசியப் பொருட்களை  மலிவான விலையில் பெறுவதற்கு 200க்கும் மேற்பட்டோர் இன்று இங்குள்ள செக்சன் 19, டேவான் தெரத்தாய் மண்டபத்தில்  நடைபெற்ற எஹ்சான் ரஹ்மா விற்பனைக்கு  வருகை தந்தனர்.

இந்த விற்பனையில் கலந்து கொண்டவர்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படும் பொருட்கள் தரத்தைப் பாராட்டியதோடு இவ் விற்பனை அடிக்கடி நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் முகமது ஃபாரிட் முஸ்தாபா கூறினார்.

இங்கு  வழங்கப்படும் பொருட்கள் புதியவையாகவும், தரமானவையாகவும்  மற்றும் மலிவாகவும் உள்ளதாக வாடிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இறைவனின் சித்தம் இருந்தால்  சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் இந்த முன்னெடுப்பைத் தொடரும்  என்பதோடு வாடிக்கையாளர்கள்  ஏமாற்றம் அடையாமல் பார்த்துக் கொள்ளும் எனவும் அவர் கூறினார்..

இன்று, இங்கு அதிகம் விற்பனையாகும் பொருட்களில் கோழி  மற்றும் முட்டைகள்  முன்னிலை வகித்தன. பெரும்பாலும்  மலிவு விற்பனைகளில் இப்பொருள்களே வாங்குபவர்களின் தேர்வாக உள்ளன என்று அவர் இன்று இங்கு சந்தித்தபோது கூறினார்.

இன்று   200 தட்டு  முட்டைகள் , 500 கோழிகள், 108 எண்ணெய் பாட்டில்கள், 300 அரிசி பாக்கெட்டுகள் மற்றும் 200 பாக்கெட் மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன என்று முஹம்மது ஃபாரிட் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, சர்க்கரை, மாவு, வர மிளகாய், சில்லி சாஸ், சோயா சாஸ், காயா, பிஸ்கட், அரைத்த மிளகாய், சாடின் போன்ற கூடுதல் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டன என்றார் அவர்.


Pengarang :