ECONOMYEKSKLUSIF -MEDIA STATEMENTNATIONAL

இந்தியா, வெங்காயத்தின் மீது  40 சதவீத ஏற்றுமதி வரியை விதித்துள்ளது

புதுடில்லி, ஆக.20-உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளராக உள்ள இந்தியா, வெங்காயத்தின் மீது  40 சதவீத ஏற்றுமதி வரியை விதித்துள்ளது. அந்த வரி விதிப்பு  உடனடியாக அமலுக்கு வரும்  என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம்   டிச.31 வரை அமலில் இருக்கும்.

இந்திய வெங்காயத்தின் மிகப்பெரிய சந்தையாக பங்களாதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் இலங்கையுடன்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  உள்ளது என்று எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் வெங்காயம் விளையும் மாநிலங்களில் இந்த மாதத்தில் ஒரு நூற்றாண்டில் மிக குறைந்த மழை பெய்ததால், உள்நாட்டு சந்தையில் வெங்காய தட்டுப்பாடு  உருவாகியுள்ளது. அதனால் ஏற்றுமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் வெங்காய அறுவடைக்கான உச்ச பருவம் ஆகஸ்ட் ஆகும். பாகிஸ்தான், சீனா மற்றும் எகிப்து ஆகியவை வெங்காயத்தின் மற்ற உலக ஏற்றுமதியாளர்களாக உள்ளன.

புதிய ஏற்றுமதி வரியை விதித்த இந்திய நிதி அமைச்சகம், காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்புகிறது.

உணவுப் பொருட்களின் விலைகளால் ஏற்படும் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவின் இரண்டாவது சமீபத்திய முயற்சி இதுவாகும். கடந்த மாதம், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இந்தியா தடை விதித்தது. உலகில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.


Pengarang :