MEDIA STATEMENTNATIONAL

ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) மூலம் RM20,000 வரை வணிக மூலதனக் கடன்

ஷா ஆலம், ஆகஸ்ட் 20: யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோரை i-Seasonal Scheme மூலம் RM20,000 வரையிலான வணிக மூலதனக் கடன்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கிறது.

பண்டிகைக் காலத்தில் அல்லது பழப் பருவத்திலோ வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் தொழில் முனைவோருக்கு இந்தச் சலுகை வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

“வணிகர்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில் இந்தத் திட்டத்தின் மூலம் RM 20,000 வரை நிதியுதவி பெறலாம் என்று அவர் Facebook மூலம் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு http://mikrokredit.selangor.gov.my/ என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது 19 ஹிஜ்ரத் கிளைகளை தொடர்பு கொள்ளலாம்.

பதிவுக்காக, 2015 ஆம் ஆண்டு முதல் ஹிஜ்ரா RM749.63 மில்லியன் மதிப்புள்ள வணிக மூலதனத்தை ஒதுக்கீடு செய்துள்ளது, இது 57,492 மாநில தொழில் முனைவோருக்கு அந்தந்த வணிகங்களை விரிவுபடுத்த பலன்களைத் தருகிறது.

விண்ணப்பதாரரின் தகுதித் தேவைகளில் பின்வருவன அடங்கும்:

சிலாங்கூர் வாசிகள் அல்லது வசிப்பவர்கள்
சிலாங்கூரில் வாக்குப்பதிவு  பெற்றவர்கள்
வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்
வணிக வளாகங்களை கொண்டிருக்க வேண்டும்
செல்லுபடியாகும் வணிக உரிமம்/அனுமதியின் நகல்
18 முதல் 65 வரைகுள்ளான வயதுடையவர்கள்


Pengarang :