EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிம்பாங் ஜெரம், பூலாய் இடைத்தேர்தல்களில் ஹரப்பானுடன்  மும்முனைப் போட்டி

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 26: செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்), பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) மற்றும் சுயேட்சை ஆகிய வேட்பாளர்களுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பூலாய்  நாடாளுமன்றத்திற்கு, பக்காத்தான் ஹராப்பான் (HARAPAN) லிருந்து ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சுஹைசன் கையாத், பெரிக்காத்தான் நேஷனல் (PN) லிருந்து சுல்கிப்லி ஜாப்பர்  மற்றும் பூட்டு சின்னத்தைப் பயன்படுத்தும் சுயேச்சை வேட்பாளரான  சம்சுதீன் மொகமட் பௌசி  ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.

இந்த விடயத்தை பூலாய் நாடாளுமன்ற தேர்தல் அதிகாரி மிஸ்வான் யூனுஸ் காலை 10.20 மணி அளவில் அறிவித்தார்.

முன்னதாக, சுஹைசான் ஒரு முன்மொழிபவர் மற்றும் ஆதரவாளருடன் காலை 9.02 மணிக்கு வேட்புமனு படிவத்தை சமர்ப்பித்தார், அதைத் தொடர்ந்து சுல்கிப்லி இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, சம்சுதீன் காலை 9.08 மணிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

மூவாரில், ஹராப்பான் வேட்பாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மான், அமானா கவாசன் பக்ரியின் துணைத் தலைவர்,  பின் வேட்பாளர் மத்திய பாஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் முகமட் மஸ்ரி யாஹ்யா மற்றும் தொழிலதிபரான  எஸ்.ஜெகநாதன். சுயேச்சை வேட்பாளர் ஆகிய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மூவாரில் உள்ள சுல்தான் இப்ராஹிம் டைமண்ட் ஜூபிலி மையத்தில்  வேட்பாளர் நியமனம்  காலை 10.10 மணி அளவில் தேர்தல் அதிகாரி N13 சிம்பாங் ஜெராம் ஜமில் ஹஸ்னி அப்துல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக,  வாஸ்குலர் ஆலோசகரும் எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் முகமட் மஸ்ரியிடமிருந்து வேட்பு மனு படிவம் காலை 9.04 மணிக்கும், அதைத் தொடர்ந்து மூவார் முனிசிபல் கவுன்சில் முன்னாள் பொறியாளர் நஸ்ரி காலை 9.08 மணிக்கும், ஜெகநாதனிடம் 9.18 மணிக்கு வேட்புமனுப் படிவம் பெறப்பட்டது என்று ஜமில் ஹஸ்னி தெரிவித்தார்.


Pengarang :