ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள், வெளியே சென்று வாக்களியுங்கள் என்று பூலாய் வாக்காளர்களுக்கு  அமிருடின்  ஷாரி ஆலோசனை

ஷா ஆலம், செப்டம்பர் 3 – பக்காத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் (ஹராப்பான்-பிஎன்) உடன்படிக்கையின் வெற்றியை உறுதி செய்வதற்காக, வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வாக்களிக்க வெளியில் வந்து,   ஒற்றுமை அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை  பாராளுமன்றத்தில். தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வாக்களிக்க பூலாய் வாக்காளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பெரித்தா ஹரியானால் மேற்கோள் காட்டப்பட்டது, சிலாங்கூரில் சமீபத்தில் நடந்த மாநிலத் தேர்தல் மோசமான வாக்குப்பதிவு அனைவருக்கும்  ஒரு பாடமாக அமைய வேண்டும், அதீத நம்பிக்கையின் விளைவாக, ஹராப்பான்-பிஎன் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்து விட்டதாக அவர் கூறினார்.

கடந்த மாதம் சிலாங்கூர் வாக்கெடுப்பில், 71 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர், அதே நேரத்தில் சீன சமூகம்  மிகவும் குறைந்த  61 சதவீத வாக்குப்பதிவு விகிதத்தை   கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

“இதனால் ஹரப்பான்-பிஎன் ஒப்பந்தம் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் நான்கு இடங்களை இழந்தது, இதன் விளைவாக நாங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இழந்தோம்,” என்று ஜோகூர் பாருவின் புக்கிட் இண்டாவில் நேற்று இரவு தேர்தல் செராமாவின் போது அவர் கூறினார்.

ஆகஸ்ட் 12 தேர்தலில் ஹராப்பான் டெங்கிலை 407 வாக்குகளில், சுங்கை கண்டிஸ் (167), கோம்பாக் செத்தியா (58),  தாமான் மேடன் (30) வாக்குகளில் இழந்தது..

“பூலாயில் ஹராப்பான்-பிஎன் வெற்றி பெற பெரும் வாய்ப்பு இருப்பதாக பலர் கூறுவதை நான் அறிவேன், ஆனால் அது, அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்று  நம்புகிறேன்.  அப்படியானால், சிலாங்கூரில் நடந்தது திரும்ப திரும்ப நடக்கும்..

ஹராப்பான்-பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ளும் என்று சிலாங்கூரில் பலர் உறுதியாக நம்பினர், அதனால்  அவர்கள் வாக்களிக்க வெளியே வராமல் இருக்க வழிவகுப்பதாகவும் அமிருடின் குறிப்பிட்டார்.

“வாக்காளர்களின் வாக்குப்பதிவை 0.5 சதவிகிதம் அதிகரித்திருந்தால், நான்கு (மேற்கூறிய) இடங்களை வென்று, மாநில சட்டமன்றத்தில் எங்களின் வலுவான பிடியைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும்.”

ஒற்றுமை  அரசாங்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அவர்.  நாட்டில், பச்சை அரசியல் அலை வீசுவதாக பெரிக்காத்தான் நேஷனல் கூறுவதை தடுத்து  நிறுத்துமாறும் மக்களுக்கு அமிருடின் புலாய் வாக்காளர்களை வலியுறுத்தினார்.

“(தொகுதிக்கும் நாட்டுக்கும்) பெரும் பங்களிப்பை வழங்கிய மறைந்த டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் வாக்காளர்கள் இந்த இடத்தை ஹராப்பான்-பிஎன் கீழ் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்  என்று கேட்டுக் கொண்டார்.


Pengarang :