ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பாரம்பரியம் நிலைநிறுத்தப்பட வேண்டும்! அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

கோலாலம்பூர் செப் 4- பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு வரலாற்று பூர்வ வருகையை புரிந்திருக்கும் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை அன்போடு வரவேற்கிறோம்.

பிரதமரின் இந்த வருகையானது பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு மேலும் பெருமையைச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியர்களின் வணிக தளமாகவும் கலாச்சார மையமாகவும் பாரம்பரியமிக்க இடமாகவும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா விளங்குகிறது. இந்த பாரம்பரியம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தையும் பிரதமரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவின்  தரம் பல மடங்கு உயர்த்தப்பட வேண்டும் என்று  கோரிக்கை முன் வைக்கிறேன்.பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில்  அங்காடிக் கடைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான்  வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும் கூடுதலாக கார் நிறுத்தும் இடங்கள் தேவைப்படுகிறது என்பதை பிரதமர் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா என்றென்றும் இந்தியர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் நிலை நிறுத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தனது உரையில் குறிப்பிட்டார்.


Pengarang :