ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இந்திய தொழில் முனைவர்களுக்கு புதிய விளம்பர யுக்திகள் வழங்கிய  பயிற்சி பட்டறை

செய்தி. சு.சுப்பையா

காஜாங்.செப்.7- சிலாங்கூர் அரசாங்கத்தின் சித்தம் -ஹிஜ்ரா ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்திய இளம் வணிகர்கள் வியாபாரத்துறையில் வெற்றி நடை போட சிறப்பான பயிற்சி திட்டங்களைக்  கொண்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலம் முழுவதிலிருந்து 37 இந்திய தொழில் முனைவர்கள் தங்களது வியாபாரத்தை எப்படி வெற்றிகரமாக விளம்பரம் செய்வது என்பதற்காக இரண்டு  டிக் டாக் பயிற்சி பட்டறை சிறப்பாக நடத்தியது.

இவர்களுக்கு தேவையான தளவாட பொருட்கள் சித்தம் கொடுத்து உதவி செய்து வருகிறது. அவர்களின் வியாபாரத்தை டிக் டாக் வழி எப்படி சந்தை படுத்துவது மற்றும் எப்படி விளம்பரம் செய்வது என்பதை தகவல் தொழில்நுட்ப துறையில் வெற்றி நடை போடும் இளம் இந்தியர்களை கொண்டு  இப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

இளம் தொழில் முனைவர்கள் இரண்டு நாட்களும்  ஆர்வத்துடன் பட்டறையில் பங்கெடுத்துக் கொண்டனர். அனைவரும் ஒரு நாள் இரவு தங்கும் விடுதியில் தங்கியிருந்து பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

இது முதல் கட்ட பயிற்சி, இன்னும் தகவல் தொழில் நுட்பத்தை முழுமையாக தெரிந்து கொள்ள பல்வேறு பயிற்சிகளில் கலந்துக் கொள்ள வேண்டும்.

சித்தம்  நடத்தவுள்ள  அடுத்த கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள ஆவலாக இருப்பதாக பயிற்சியில் கலந்து கொண்ட குவாங் வட்டார  இந்திய சமுதாய தலைவராக சேவையாற்றி வரும் சிவ சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதே போல் நாடறிந்த பெண் எழுத்தாளர் திருமதி நிர்மலா பெருமாள் அவர்களின் மகள் சுபாஷினியும் தெரிவித்தார். இவர்களை போன்ற கலந்து கொண்ட பெரும்பான்மை யானவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்காக காத்திருப்பதாக கூறினர்.

கலந்து கொண்ட அனைவரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சித்தாம் மற்றும் ஹிஜ்ராவின் சேவையை வெகுவாக பாராட்டினர்.

பயிற்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பட்டனர்.


Pengarang :