ALAM SEKITAR & CUACAECONOMY

சிலாங்கூர்  ஹிஜ்ரா – சித்தம்  இந்திய  இளம் தொழில் முனைவர்களுக்கு  பயிற்சி பட்டறையை தொடரும்.  தலைமை நிர்வாகி கெனத் சைம் அறிவிப்பு.

செய்தி ; சு.சுப்பையா

காஜாங்.செப்.8-  சிலாங்கூர்  ஹிஜ்ரா  ஏற்பட்டில் நடத்தப்படும்  தொழில் மற்றும்  வணிக மேம்பாட்டு பயிற்சிகள்  தொடரும் என்றார்  சித்தாம் தலைமை நிர்வாகி கெனத் செம், இந்திய தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க., இது போன்ற பயிற்சிகளை  சிலாங்கூர் மாநில முழுவதும்  நடத்த சித்தாம் தயாராகி வருகிறது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும்  செய்யப்படுவதாக  தெரிவித்தார்.

காஜாங் வட்டாரத்தில் இந்திய இளம் தொழில் முனைவர்கள், தங்களது வியாபாரத்தை டிக் டாக் வழி எப்படி சந்தை படுத்துவது. வியாபாரத்தை விரிவு படுத்துவது என்பதற்கான 2 நாள் பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மொத்தம் 37 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு அடுத்த கட்ட பயிற்சியும் விரைவில் நடத்தப்படும். இப்பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த படவிருக்கிறது.
இந்த மூன்று கட்ட பயிற்சியில் கலந்து கொண்டு டிக் டாக் வாயிலாக தங்களது வியாபாரத்தை விரிவு படுத்தி சிறப்பாக செயல்படும் இளம் வியாபாரிகளுக்கு உதவ சிலாங்கூர்  ஹிஜ்ராவிடம்  நல்ல திட்டங்கள் உண்டு.

இந்திய வியாபாரிகளை  தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்குவதேசிலாங்கூர்  ஹிஜ்ரா –  சித்தம் உயர் லட்சியம். இப்படி சிறப்பாக வியாபாரத்தில் வெற்றி நடை போடுபவர்களுக்கு கடன் வசதியும் செய்து கொடுக்கிற நோக்கம்  கொண்டுள்ளதாக  கெனத் கூறினார்.

சிலாங்கூரில் வியாபாரத்தில் ஈடுபடும் இந்திய வியாபாரிகளுக்கு உதவவே சிலாங்கூர்  ஹிஜ்ராவின் துணை நிறுவனமான சித்தம் தொடங்கப் பட்டது. அன்றைய  பயிற்சி பட்டறையிம் அந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது.. மாநில அரசின் கீழ் இயங்கும் சிலாங்கூர்  ஹிஜ்ரா- சித்தம் சேவையை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய சமுதாய நலனை முன் வைத்து மாநில அரசால் தொடங்கப்பட்ட சிலாங்கூர்  ஹிஜ்ரா – .சித்தம் சிறப்பாக செயல்பட மாநில அரசு எல்லா உதவிகளும் செய்து வருகிறது. இத்தருணத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரிக்கு சித்தாம் தலைமை நிர்வாகி என்ற முறையில் தனது நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொண்டார்.

அதே வேளையில் சிலாங்கூரில் சொந்த தொழில் அல்லது வியாபாரத் துறையில் ஈடுபடும் இந்திய இளம் தொழில் முனைவர்கள் சித்தமுடன் தொடர்பு கொண்டு தங்களது வியாபாரத்தை   எப்படி தகவல் தொழில்நுட்பத்தில்  டிக் டாக்   செயலியை  பயன்படுத்தி  விரிவு படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த 2 நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களை வெகுவாக பாராட்டினார். அனைவரும் சிலாங்கூர்  ஹிஜ்ரா-  சித்தம்  இணைந்து நடத்தும் எல்லா பயிற்சிகளிலும் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


Pengarang :