ECONOMYMEDIA STATEMENTNATIONAL

205,810 வாக்காளர்கள் இன்று பூலாய் நாடாளுமன்றம், சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற தொகுதிகளில் வாக்களிப்பர்.

ஜோகூர் பாரு, 9 செப்டம்பர்: பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் (பிஆர்கே) மொத்தம் 205,810 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளை இன்று தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தேர்தல் ஆணையம் (SPR)  கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 5) 831 போலீஸ் வாக்காளர்கள் மற்றும் அதற்கு முன் 304 தபால் வாக்குகள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஆரம்ப வாக்குப்பதிவு செயல்முறை முடிந்ததாக கூறுகிறது.

இந்த இரு இடைத்தேர்தலுக்கான 14 நாட்கள் பிரசாரம் நேற்று இரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது.  இன்று காலை சரியாக 8 மணிக்கு, 61 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 47 வாக்குச் சாவடிகளில் 294 வாக்களிக்கும் மையங்கள் பூலாய் பாராளுமன்றத்திலும், அதே சமயம் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்றத்தில் 68  வாக்களிக்கும் மையங்கள்  உள்ளடக்கிய 14 வாக்குச் சாவடிகளும்  உள்ளன, அவை மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்கிறது.

இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இரு பகுதிகளிலும் காலையில் மழை பெய்யும் என்றும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்றம் ஆகிய இரண்டிலும் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்), பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பூலாய்காக, ஹராப்பான் வேட்பாளர் சுஹைசன் கையாத் சுல்கிப்லி ஜாஃபர் (பிஎன்) மற்றும் சுயேட்சை வேட்பாளர் சம்சுடின் முகமது ஃபௌசி ஆகியோரைச் சந்திப்பார், சிம்பாங் ஜெராமில், நஸ்ரி அப்துல் ரஹ்மான் (பிஎச்) அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது மஸ்ரி யாஹ்யா (பிஎன்) மற்றும் சுயேட்சை வேட்பாளர் எஸ். ஜெகநாதனைச் சந்திப்பார்.

கடந்த ஜூலை 23ஆம் தேதி பதவியில் இருந்த டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப்பின்  எதிர்பாராத  மறைவை  அடுத்து  அந்த  தொகுதிகளில் காலியான  இரண்டு இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :