ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசப்பற்று, இன ஒற்றுமையின் வழி மலேசிய தின உணர்வைப் போற்றுவோம்- பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்,  செப் 16-  நாட்டின் மீதான ஆழ்ந்த பற்று, கருணை,  அன்பு  மற்றும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் இந்த ஆண்டு மலேசிய தின உணர்வை அனைத்து குடிமக்களும் போற்றிக் கொண்டாடுவோம்  என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அனைத்து குடிமக்களும் தப்பெண்ணத்தை நிராகரித்து புரிதலையும் அன்பையும் வளர்த்துக்  கொள்ளத் துணிந்தால் இந்த நாடு வலிமையாக, முன்னேறும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசத்தின் அனைத்து மக்களுக்கும் மலேசியா தின வாழ்த்துக்கள்! என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த ஆண்டு மலேசியா தினம் “மலேசியா மடாணி: ஒற்றுமையின் உறுதிப்பாடு நம்பிக்கையை நிறைவேற்றுகிறது” என்ற இவ்வாண்டிற்கான தேசிய தினத்திற்கான அதே கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.

 தேசிய அளவிலான மலேசியா தின கொண்டாட்டம் இம்முறை சரவாக்கில் உள்ள கூச்சிங்கில் உள்ள  பெர்பாடுவான் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது.


Pengarang :