ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சந்தையில் அரிசி பற்றாக்குறை தொடர்பில் புகார் அளிக்க 24 மணி நேர தொலைபேசி சேவை- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், செப் 22- சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் அது குறித்து பொது மக்கள் மாநில அரசின் அரிசி மற்றும் நெல் கட்டுப்பாட்டு பிரிவின் வாயிலாக புகார் அளிக்கலாம்.

இந்நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி பொதுமக்கள் புகார் தரலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அகவே, பொது மக்கள் பதட்டத்தில் அதிக அளவில் அரிசியை வாங்கி கையிருப்பு வைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அரிசி தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் அது குறித்து நெல் மற்றும் அரிசி கட்டப்பாட்டு பிரிவிடம் புகார் தரலாம் என அவர் சொன்னார்.

மக்களின் வசதிக்காக புகார் கிடைக்கும் இடங்களுக்கு நாங்கள் உடனடியாக அரிசியை அனுப்புவோம் என்றார் அவர். நேற்று இங்குள்ள விஸ்மா பி.கே.பி.எஸ்.சில் நடைபெற்ற ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை பாராட்டு விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரிசி பற்றாக்குறை தொடர்பான புகார்களை அளிப்பதற்கு 03-32898419 அல்லது 017-2230771 என்ற எண்களில் நேரடியாக அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர். 


Pengarang :