ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கெடா, பெர்லிஸில் திங்கள் வரை தொடர் மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், செப் 24 –  பெர்லிஸ் மற்றும் கெடாவின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் தொடர்ந்து மழை பெய்யும் என    மலேசிய வானிலை ஆய்வுத் துறை   எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெடாவின் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொகோக் செனா, பாடாங் தெராப், யான் மற்றும் பெண்டாங் ஆகியவை பாதிக்கப்படும் இடங்களில் அடங்கும் என்று அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

இதற்கிடையில், தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் நாளை வரை வலுவான மேற்குக் காற்று வீசும் என்பதோடு அது தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலை காரணமாக  தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நீண்ட காலத்திற்கு  பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

வானிலை தொடர்பான சமீபத்திய மற்றும் நம்பகமானத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.met.gov.my  வலம் வரும்படி  பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .– பெர்னாமா


Pengarang :