ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வீட்டை முறையாக பராமரிக்காத உரிமையாளருக்கு வெ.150 அபராதம்- நீதிமன்றம் தீர்ப்பு

ஷா ஆலம், செப் 28- பந்திங், தாமான் ஸ்ரீ புத்ராவிலுள்ள தனது வீட்டை முறையாகப் பராமரிக்காமல் புதர்கள் சூழும் அளவுக்கு அலட்சியமாக இருந்த உரிமையாளர் ஒருவர் நேற்று தெலுக் டத்தோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

முப்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் மீது 1976ஆம் ஆண்டு (சட்டம் 171) ஊராட்சி மன்றச் சட்டத்தின் 74வது பிரிவின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டதாக கோல லங்காட் நகராண்மைக் கழகம் கூறியது.

இந்த குற்றத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் 150 வெள்ளி அபராதமும் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மூன்று நாட்கள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் அபராதத் தொகையைச் செலுத்தினார். அந்நபர் தனது வீட்டை முறையாகப் பராமரிக்காததால் புதர்கள் மண்டிய நிலையில் அந்த குடியிருப்பு வளாகம் காணப்பட்டது என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

தங்கள் வீடுகள் எப்போதும் சுத்தமாகவும் அண்டை அயலாருக்கு தொல்லை தராத வகையிலும் இருப்பதை உறுதி செய்யும்படி  பொது மக்களை நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டது.

நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறும் தரப்பினருக்கு எதிராக நகராண்மைக் கழகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஒருபோதும் தயங்காது எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது


Pengarang :