MEDIA STATEMENTNATIONAL

புறப்பாட நடவடிக்கையின் போது நேர்ந்த துயரம்- கோல் கம்பம் விழுந்து மாணவன் மரணம்

பிந்துலு, செப் 30- சக மாணவர்களுடன் புறப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 11 வயது மாணவன் இரும்பிலான கோல் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள சென்ட். அந்தோணி தேசிய பள்ளியில் நேற்று நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை 7.45 மணியளவில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக பிந்துலு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் பாத்லோமியோ உம்பிட்  அறிக்கை ஒன்றில் கூறினார்.

புறப்பாட நடவடிக்கையின் போது உடைந்ததாக நம்பப்படும் இரும்பு கோல் கம்பத்தால் பாதிக்கப்பட்டு மாணவர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்குள்ளானார் என்று அவர் சொன்னார்.

அந்த மாணவர் உடனடியாக பிந்துலு மருத்துவமனைக்கு  கொண்டுச் செல்லப்பட்டதாகவும் எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்திய தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் குற்றத்தன்மை எதுவும் இல்லை என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர்  இதனைத் தாங்கள் திடீர் மரணம் என வகைப்படுத்தி உள்ளது சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊகங்களை வெளியிடவோ தவறானச் செய்திகளைப் பரப்பவோ வேண்டாம் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :