ECONOMYMEDIA STATEMENT

இம்மாதம் 24 வரை 188,102 இல்லத்தரசிகள்  சொக்சோ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

.பெண்டாங், செப் 30-  இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 24 வரை மொத்தம் 188,102 இல்லத்தரசிகள் சந்தா செலுத்தியுள்ளதாக மனிதவளத் துறை அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையில் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த 166,666 இல்லத்தரசிகளும் அடங்குவர் என்றும் அவர்களுக்கானச் சந்தா பணத்தை அரசாங்கமே செலுத்திய வேளையில் மீதமுள்ள 21,436 பேர் தன்னார்வ அடிப்படையில் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மாநில அளவிலான விகிதாசாரப்படி பகாங்கில் மொத்தம் 6,636 பேர் இத்திட்டத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் பெல்டா  குடியேற்றப் பகுதியில் நடைபெற்ற MyFutureJobs Career Carnival என்ற வேலை வாய்ப்புச் சந்தையின் தொடக்க விழாவில் பேசும்போது கூறினார்.

இந்நிகழ்வை  துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி நிறைவு செய்தார். பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் மற்றும் ஹவா தலைவர் டான்ஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் நோக்கில்  இந்த வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்படுவதாக கூறிய அவர்,   பினாங்கு மற்றும் சிலாங்கூருக்கு அடுத்து இங்கு நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் உற்பத்தி, சேவை, நிதி மற்றும் காப்பீட்டுத் துறைகள் உட்படுத்திய  18 முதலாளிகள்  மொத்தம் 1,168 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர் என்றார்


Pengarang :