ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பெரும் சவாலுக்கு இடையே சேவையாற்றுகிறேன்.

செய்தி  ; சு. சுப்பையா

கோல குபு பாரு  .அக்.11- கோல குபு பாரு தொகுதியில் இந்தியர்களுக்கு பெரும் சவாலுகிடையே சட்டமன்ற உறுப்பினர் லீ கி ஹியொங் பேராதரவுடன் சேவையாற்றி வருகிறேன் என்று இத்தொகுதியின் இந்திய சமுதாய தலைவர் பாலசந்தர் தெரிவித்தார்.

கடந்த 2 தவணையாக உலு பெர்ணம் தொகுதியில் சேவையாற்றினேன். அதன் பின்னர் கடந்த  தவணை இலிருந்து  கோல குபு பாரு தொகுதியில் சேவையாற்றி வருகிறார்.  கோல குபு பாரு பெரிய தொகுதி. இத்தொகுதி உலு பெர்ணம் தொகுதியை விட அளவில் பெரியது மக்கள்  தொகையும் அதிகம். அதானல்  இங்கு பிரச்சனைகளும் அதிகம். இப்பிரச்சனைகள் அனைத்தையும் சட்டமன்ற உறுப்பினரின் உதவியால் தீர்வு கண்டு வருகிறேன்.

ஹிஜ்ரா, சித்தாம் திட்டம், ஐ- சீட் போன்ற திட்டங்கள் குறித்து இந்திய சமுதாயத்திற்கு விளக்க கூட்டங்கள் அவ்வப்போது நடத்தி வருகிறேன்.

தொகுதி இந்தியர்களுக்கு சிறு தொழில் நடத்த பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளேன். இதே போல் மாவட்ட சமூக நல இலாகாவின் உதவியோடு பலருக்கு மற்ற பல உதவிகளும் செய்துள்ளேன். மாவட்ட சமூக நல இலாகா எல்லா வகையிலும் உதவி செய்து வருகிறது.

இத்தொகுதியில் உள்ள 5 தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டம் பெரும் சவாலாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண என்னால் முடிந்த அளவில் ஈடு பட்டு வருகிறேன்.

இப்பிரச்னையில் பல்வேறு குழுக்கள் இருப்பதால் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நடந்து முடிந்த மாநில தேர்தலில் தோட்ட தொழிலாளர் வீட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. தேர்தலுக்கு பின்னர் வீடமைப்பு நடவடிக்கை குழுவினரோடு சந்திப்பு கூட்டம் நடத்தியுள்ளோம்.  இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண தொடர்ந்து முயற்சிப்போம் என்று பாலசந்தர் கூறினார்


Pengarang :