ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024 வரவு செலவுத் திட்டத்திற்கு ஒற்றுமை அரசின்  ஒதுக்கீடு 39,380 கோடி வெள்ளி 

கோலாலம்பூர், அக் 13- மொத்தம் 39,380 கோடி வெள்ளி நிதியை உள்ளடக்கிய 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல்  செய்யப்படுகிறது. இந்த தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.9 விழுக்காடாக விளங்குகிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீட்டைப பெற்ற அமைச்சுகளில் நிதி அமைச்சு, கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.

மொத்த செலவினத்தில் இது 42.3 விழுக்காடாகும் என்று நிதியமைச்சு இன்று வெளியிட்ட 2024 ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசின் நிதி ஆய்வு மற்றும் வருவாய் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள 39,380 கோடி வெள்ளியில் 77.1 விழுக்காடு அல்லது 30,380 கோடி வெள்ளி நிர்வாகச் செலவினங்களுக்கு எஞ்சிய 9,000 கோடி வெள்ளி மேம்பாட்டுச் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும்.

கூட்டரசு அரசின் 2023ஆம் ஆண்டிற்கான செலவினத்தில் தொடக்கத்தில் 38,610 கோடி வெள்ளி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.4 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் அது 39,710 கோடி வெள்ளியாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டிற்கான செலவினத் தொகை விழுக்காடு மறுஆய்வு செய்யப்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.2 விழுக்காடாக அல்லது 30 ஆயிரத்து 10 கோடி வெள்ளியாக உயர்த்தப்பட்டது.

மடாணி பொருளாதார முன்னெடுப்பின் கீழ் மின்சாரம், சமையல் எண்ணெய், துப்புரவு சேவை மற்றும் பள்ளி பாதுகாப்புக்கான மானியம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து செலவினம் 2.5 விழுக்காடு உயர்வு கண்டது.


Pengarang :