ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024 பட்ஜெட்- அடுத்தாண்டில் சேவை வரி 8 விழுக்காடாக அதிகரிக்கப்படும்

ஷா ஆலம், அக் 13- அடுத்தாண்டு தொடங்கி நாட்டில் சேவை வரி இரு புள்ளிகள் அதிகரித்து எட்டு விழுக்காடாக உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையினால் மக்களுக்கு சுமை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்வதற்காக உணவு, பானங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு இதில் விலக்களிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

வரி விதிப்புக்கு உட்பட்ட சேவைகளின் வரையறையை சரக்கு போக்குவரத்து, தரகு, ஏற்பாட்டு ஆதரவு மற்றும் கராவோக்கே ஆகியவற்றுக்கும் அரசாங்கம் விரிவுபடுத்தும் என்று இன்று 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு சிறப்பான சேவைகளையும் உதவித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஏதுவாக வருமானத்தைப் அதிகரிப்பதற்கு அரசாங்கம் அமல்படுத்தியுள்ள சில வரி சீர்திருத்தங்களில்  இவையும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி பத்து விழுக்காடு நிகர லாப அடிப்படையில் பட்டியலிடப்படாத பங்குகளை விற்பனை செய்யும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரியை விதிப்பதற்கும் புத்ராஜெயா இணக்கம் தெரிவித்துள்ளது என்றார் அவர்.

இந்த துறையில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :