MEDIA STATEMENTPBT

உலு  சிலாங்கூரில்  தீபாவளியை முன்னிட்டு பெரிய குப்பை தொட்டிகள் ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO)  30 இடங்களில்  ஏற்பாடு

ஷா ஆலம், அக் 19: உலு சிலாங்கூரில் வசிப்பவர்கள் பழைய தளவாடப் பொருட்களை அப்புறப்படுத்த  ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டி 30 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அக்டோபர் 23 முதல் நவம்பர் 4 வரை இச்சேவை இலவசமாக வழங்கப்படும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

“மூன்று டன் கொள்ளளவு கொண்ட ரோல் ஆன் ரோல் ஆஃப் தொட்டிகள் உலு சிலாங்கூரைச் சுற்றி அமைந்துள்ளன, அதாவது பத்தாங் காலி, புக்கிட் பெருந்தோங், புக்கிட் செந்தோசா, கோலா குபு பாரு மற்றும் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

சோஃபாக்கள், மெத்தைகள், படுக்கைகள் போன்ற பழைய தளவாடப் பொருட்கள் மற்றும் ரேடியோக்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், பேட்டரி சார்ஜர்கள், மொபைல் போன்கள் மற்றும் தோட்டக் கழிவுகள் போன்றவையும் அப்புறப்படுத்த கூடிய கழிவுகளில் அடங்கும் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவிக்கிறது.

“வீட்டுக் கழிவுகள் அல்லது உணவுக் கழிவுகள் போன்ற சமையலறைக் கழிவுகளை இந்த ரோரோ தொட்டியில் வீசுவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

“ஒப்பந்தக்காரர் சேகரிப்பை எளிதாக்குவதற்கும், சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் வசதியாகவும் வைத்திருக்க, ரோரோ தொட்டிகளில் மொத்த கழிவுகளை வீசுவதன் மூலம் குடியிருப்பாளர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ரோரோ தொட்டி சேவை தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்தம் துறையை 03-6064 1050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :