ECONOMYMEDIA STATEMENT

இலவசச் சுகாதார பரிசோதனை திட்டம் – பண்டார் உத்தாமா தொகுதி

ஷா ஆலம், அக் 19: இந்த சனிக்கிழமை பண்டார் உத்தாமா தொகுதி இலவசச் சுகாதார பரிசோதனை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. 

காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பாலாய் ராயா கம்போங் சுங்கை காயு ஆராவில் சுகாதார பரிசோதனை நடைபெறவுள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் http://tiny.cc/KlinikKayuAra என்ற லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அவர் விளக்கினார்.

“உடல்நலப் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்துடன் நாங்கள் இந்தத் திட்டத்தை மீண்டும்  ஏற்பாடு செய்கிறோம். 

“இந்தத் திட்டத்தில் அசுன்தா பெட்டாலிங் ஜெயா மருத்துவமனையின் ஒத்துழைப்பும் உள்ளது. பண்டார் உத்தாமா தொகுதியில் வசிப்பவர்கள் அவர்கள் உடல் நலத்தைப் பரிசோதிக்க வருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

விண்ணப்பதாரர்கள் மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும் மற்றும் மாதத்திற்கு RM2,500க்கும் குறைவான வருமானம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கிடையில், அசுந்தா மருத்துவமனை சமூக நல வெளிநோயாளர் திட்ட (SWOP) அட்டைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள், அவர்களின் சம்பளச் சீட்டின் நகலை/மாதாந்திர வருமானச் சான்று/ உதவி பெறுபவரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தத் திட்டம் தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு 016-684 9371 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :