ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்லாம் அல்லாத வழி பாட்டு தளகளுக்கு ரி.ம. 5 கோடி மானியதை வரவேற்கிறார்கள் ஆலயத்தலைவர்கள்

செய்தி சு.சுப்பையா
டமான்சாரா.அக்.16-  2024 ஆம் ஆண்டு வருடாந்திர வரவு செலவு திட்டத்தில் இஸ்லாம் அல்லாத வழி பாட்டு தளகளுக்கு ரி.ம 5 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இது வரவேற்க படக் கூடியது. கோவிட் 19 பெருந் தொற்றுக்கு பிறகு இந்து ஆலயங்கள் நிர்வாகத்தில் பெரும் நிதி சுமையை ஆலய நிர்வாகங்கள் எதிர் நோக்கி கொண்டிருக்கின்றன. இத்தகைய நெருக்கடியான சூழலில் இத்திட்டம் வரவேற்க கூடியது.. இதன் வழி ஆலயங்கள் எதிர் நோக்கி கொண்டிருக்கும் பெரும் நிதி சுமைக்கு  நல்ல தீர்வு கிடைத்துள்ளது என்று கம்போங் காயூ ஆரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கோவிட் 19 பெருந் தொற்றால் ஆலயங்கள் முறையாக பராமரிக்க முடியவில்லை. அதே வேளையில் போதுமான நிதியும் கிடைக்கவில்லை. இக்கால கட்டத்தில் பழுது அடைந்த ஆலய வளாகத்தையும் சீரமைக்க முடியவில்லை. ஆலய சீரமைப்பு பணிகளுக்கு பெரும் நிதியுதவி தேவைப்படுகிறது.
மேலும் அர்ச்சகர்கள், ஒதுவார், கணக்கு பிள்ளை, ஆலய பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திர சம்பலமும் பெரும் சுமையாகவுள்ளது.
இந்த காலக் கட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  இஸ்லாம் அல்லாத வழி பாட்டு தளகளுக்கு 5 கோடி ரிங்கிட் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்தது பாராட்டத் தக்கது.
இப்படி பட்ட நிதியுதவியுடம் கலை பண்பாட்டு நிகழ்வுகளும் ஆலயத்திக்குள் ஏற்பாடு செய்ய வாய்ப்புகள் அதிகரிக்கும். இளைஞர்கள் ச்மூக சீர் கேடுகளில் சிக்கி தவிக்காமலிருக்க ஆலயங்கள் சமூக மேம்பாட்டு தளங்களாக செயல் படும் என்று எதிர்பார்க்கலாம் என்று ஆலயத்திம் தலைவர் அன்பழகன், செயலாளர் மயில்வாகனம், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

Pengarang :