ECONOMYMEDIA STATEMENT

இந்திய தொழில் முனைவோர்களை அனைத்துலக சந்தைக்கு- சித்தம் இலக்கு.

செய்தி ;சு.சுப்பையா

ஷா ஆலம்.அக்.25-  2019 ஆம் ஆண்டு முதல் சித்தமின் வழி பல தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளோம். இவர்களில் 40 முதல் 50 பேர் வரையில் அனைத்துலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது சித்தாமின் இலக்கு.

அந்த வகையில் அடுத்தாண்டு துணிக்கடை மற்றும் உணவுத்துறையில் வெற்றிகரமாக வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை புருனை, சீனா போன்ற நாடுகளின் வியாபார சந்தைக்கு கொண்டு செல்வோம் என்று சித்தாம் தலைவர் கெனத் சைம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு ஆண்டுதோறும் ரி.ம. 10 லட்சம் சித்தாமிற்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிதியின் வழி இந்தியர்களுக்கு சொந்த தொழில் செய்வதற்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி நடை போடுபவர்களின் வியாபாரத்தை உலகளாவிய அளவில் கொண்டு செல்வது தமது இலக்கு என்று கெனத் சைம் தெரிவித்தார்.

மேலும் சொந்த வாகனம் அல்லது சிறிய லாரிகள் வழி வியாபாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பு செய்து வருகிறோம். இத்திட்டத்தின் வழி குறைந்தது 30 பேருக்கு வாகனம் அல்லது சிறிது லாரி வாங்க நிதியுதவி செய்யவிருக்கிறோம்.

இதே போல் இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சொந்த தொழில் செய்ய ரி.ம. 3 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளோம். சிலாங்கூரில் உள்ள இந்திய இளைஞர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முறையான பயிற்சி வழங்கி அவர்களையும் சொந்த தொழிலில் ஈடுபடுத்த  திட்டங்கள் வகுத்துள்ளோம்.

வியாபாரத்தில் ஈடுபடும் இந்திய தொழில் முனைவர்கள் தகவல் தொழில் நுட்பத்திலும்  பயிற்சி பெற்று வியாபாரத்தில் வெற்றி நடை போட டெலிக்கோம் மலேசியா நிறுவனத்துடன் இணைந்து இணைய தள வாயிலாக தங்களது வியாபார சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின்  இலக்காகும்.

மந்திரி புசாரின் இலக்கை அடைய, சிலாங்கூர் இந்தியர்கள் அடுத்தாண்டு வெற்றிகரமாக மேற்கண்ட 4 இலக்குகளில் சித்தமின் வழி அடைவது நமது இலக்காகும் என்று கெனத் சைம் தெரிவித்தார்.


Pengarang :