ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரின் நிலையான வளர்ச்சிக்கு ஐந்து துறைகள் மீது மாநில அரசு கவனம்

ஷா ஆலம், அக் 28 – நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் இலக்கை அடைய சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் என்று  சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

பேரழிவை எதிர்க்கும் திறன் மற்றும் மேலாண்மை, குறைந்த கார்பன்,  பல்லுயிர் மற்றும் இயற்கை வளங்கள், நீர் மேலாண்மை, மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவையே அந்த ஐந்து துறைகளாகும் என்று அவர் சொன்னார்.

மாநில மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல், அதன் தற்போதைய நிலை மற்றும் 2035 க்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) செயல்படுத்தும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின்  அடிப்படையில் இந்த துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட முதலாவது சிலாங்கூர் திட்டம் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கொள்கைகளின் அடிப்படையில் இதேபோன்ற வியூக அணுகுமுறையை எடுத்துள்ளது என்று அவர் இன்று மாநில அளவிலான தேசிய சுற்றுச்சூழல் தினம்  கொண்டாட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிழ்வில் அவர் மந்திரி   புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தயாரித்த உரையை வாசித்தார்.

எதிர்காலத்தில் சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை சார்ந்த முன்னெடுப்புகள், கொள்கைகள், உத்திகள் மற்றும் செயலாக்கம் குறித்து விவாதிப்பதற்குரிய தளமாக செயல்படக்கூடிய பசுமைக் மன்றத்தை நிறுவுவதில் மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் ஜமாலியா கூறினார்.


Pengarang :