ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசிய இந்திய கலைஞர்களுக்கு திவேட் தொழில் திறன் பயிற்சி! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் அக் 28-  மலேசிய திருநாட்டில் உள்ள இந்திய கலைஞர்களுக்கு உதவும் வகையில் திவேட் தொழில் திறன் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர்  வ. சிவகுமார் தெரிவித்தார்.
மலேசிய இந்திய கலைஞர்கள் தங்களது திறமைகளையும் தொழில் நுட்பங்களையும்  வளர்ந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி பெரும் துணை புரியும். இந்த பயிற்சி திட்டம் தொடர்பில் மிக விரைவில் மலேசிய இந்திய கலைஞர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிவேன்.
மலேசிய இந்திய கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நான் பலமுறை நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து இருக்கிறேன்.  இப்போது மனிதவள அமைச்சராக இருப்பதால் திவேட் தொழில் திறன் பயிற்சி மூலம் மலேசிய இந்திய கலைஞர்களுக்கு உதவ முடியும் என்றார் அவர்.
நம்பிக்கை குழுமத்தின் உரிமையாளர்  டத்தோஸ்ரீ டாக்டர் முஹம்மது இக்பால் தலைமையில் நேற்று நடைபெற்ற சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முத்தாய்ப்பாக விளங்கிய இந்த நிகழ்வில் நம்பிக்கை குழுமத்தின் உரிமையாளர்
டத்தோஸ்ரீ இக்பால், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட்,  டத்தோ டி.மோகன், டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா, டத்தோ பி.சகாதேவன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pengarang :