ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலை பழுது தொடர்பான 676 புகார்களுக்குத் தீர்வு- 236 புகார்களுக்கு தீர்வு காண நடவடிக்கை

கோலாலம்பூர், அக் 28- சாலை பழுது தொடர்பான 675 புகார்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ள வேளையில் மேலும் 236 புகார்களுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் இம்மாதம் 23ஆம் தேதி  வரை மைஜாலான் செயலி மூலம் பெறப்பட்ட 3,403 புகார்களில் 912 பொதுப் பணி இலாகாவின் பராமரிப்பில் உள்ள சாலைகளைப் பற்றியதாகும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

எஞ்சிய 2,491 புகார்கள் மாநிலச் சாலைகள் மற்றும் ஊராட்சி மன்றச் சாலைகளை உட்படுத்தியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

கிடைக்கப் பெற்ற புகார்களில் 912, சாலைகளில் காணப்படும் குழிகள் தொடர்பானவை எனக் கூறிய அவர், சாலை விளக்குகள் தொடர்பில் 187 புகார்களும் சாலை பழுது தொடர்பில் 174 புகார்களும் சமிக்ஞை விளக்கு தொடர்பில் 98 புகார்களும்  சாலை கோடுகள் தொடர்பில் 64 புகார்களும் பெறப்பட்டன என்றார்.

பொதுப்பணி இலாகா மற்றும் மலேசிய நெஞ்சாலை வாரியத்தின் கீழுள்ள சாலைகளோடு மாநில மற்றும் ஊராட்சி மன்றச் சாலைகளையும் இந்த புகார்கள் உள்ளக்கியிருந்தன என்று அவர் தெரிவித்தார்.

நோ ரோங் பாலிசி கொள்கையின் கீழ் பொதுப்பணி இலாகா அனைத்து புகார்களையும் மைஜாலான் செயலி வாயிலாக பெற்று அதனை மாநில மற்றும் ஊராட்சி மன்றங்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் என அவர் குறிப்பிட்டார்.

மைஜாலான் செயலி வாயிலாக பெறப்படும் புகார்கள் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு உரிய தீர்வு காண்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டத் தரப்பினருடனான ஒத்துழைப்பை பொதுப்பணி இலாகா மேம்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

பொதுப் பணி இலாகாவின் மேற்பார்வையில் செயல்படும் இந்த மைஜாலான் செயலியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.


Pengarang :