ECONOMYMEDIA STATEMENT

இந்திய சமுதாய தலைவர் லோகநாதன் சேவையை பாராட்டினர்

செய்தி சு.சுப்பையா
சுங்கை பூலோ. அக்.28- புக்கிட் லஞ்சான் சட்ட மன்றத்தின் இந்திய சமுதாயத் தலைவர் லோகநாதன் சிறப்பாக சேவையாற்றி வருகிறார் என்று கம்போங் காயூ ஆரா வட்டாரத்தை சேர்ந்த திருமதி கிரேஸ் முனுசாமி பாராட்டினார்.


தீபாவளியை முன்னிட்டு முறுக்கு சுடும் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வு வெற்றியடைய வேண்டும் என்று மாதர்களை திரட்டுவதில் தீவிர கவனம் செலுத்தினார். இன்று காலை முதல் முழு நேரமாக நிகழ்வை வழி நடத்தி வந்தார்.

மேலும் இதே போல் கடந்த மாதத்தில் என்னை போன்ற தனித்து வாழும் தாய்மார்களை திரட்டி கொண்டை மாலை கட்டும் பயிற்சியையும் வழங்கினார். அதன் வழி குடும்ப மாதர்களின் வருமானம் அதிகரிக்க வழி வகை செய்து கொடுத்தார்.

இதே போல் தொடர்ந்து குடும்ப மாதர்களின் மாதாந்திர வருமானம் அதிகரிக்க சிறப்பான திட்டங்களை லோகநாதன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

திருமதி கிரேஸ் முனுசாமி, திருமதி.தமிழ் செல்வி, சட்ட மன்ற உறுப்பினர் புவா மற்றும் லோகநாதன்.

Pengarang :