ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உள்நாட்டு விநியோக தேவைக்கு ஏற்ப வெங்காய ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்துகிறது

புதுடெல்லி, அக்டோபர் 29 – வெங்காயம் ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்தி, குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 800 அமெரிக்க டாலர் (RM3,822) விதித்துள்ளது.

நிலையான  விலை ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது, இது 2023 ஆம் ஆண்டு இறுதி வரை பராமரிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

“2023 பயிர் பருவத்தில் இருந்து கையிருப்பில் சேமிக்கப்படும் வெங்காயத்தின்    அளவு குறைந்து வருவதால், உள்நாட்டு நுகர்வோருக்கு சரியான விலையில் வெங்காயம் போதுமான அளவு கிடைப்பதை பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அது கூறியது.
 

அரசாங்கம் அதன் தாங்கல் இருப்புக்களை அதிகரிக்க கூடுதலாக 200,000 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்கிறது.

 

சில்லறை விற்பனை விலையை கட்டுக்குள் வைத்திருக்க ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் கையிறுப்பிலிருந்து இருந்து இறக்கி வருகிறது.

இந்தியா ஆகஸ்ட் மாதம் வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது. டில்லி பிராந்தியத்தில் வெங்காயத்தின் விலை சமீபத்திய நாட்களில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது மற்றும் அடுத்த மாதம் தற்போதைய விலையில் இருந்து  40 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Pengarang :