Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari ketika menjawab soalan dalam sidang Dewan Negeri Selangor (DNS) di Bangunan Annex pada 26 Ogos 2021. Foto NAZIR KHAIRI
ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் மாநில பட்ஜெட் நவம்பர் 10ஆம் தேதி தாக்கல். மீடியா சிலாங்கூர் வழி நேரடி ஒளிபரப்பு

ஷா ஆலம், நவ 3- சிலாங்கூர் மாநில அரசின் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் 10ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்.

மந்திரி புசாரின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு சிலாங்கூர் டிவி, மீடியா சிலாங்கூர் பேஸ்புக் மற்றும் அமிருடின் ஷாரி பேஸ்புக் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

வரவு செவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த செய்திகள் சிலாங்கூர் கினி இணைய ஏட்டிலும் தமிழ், சீனம் மற்றும் ஆங்கில மொழி இணைய பதிப்புகளிலும் இடம் பெறும். வரவு செலவுத் திட்டம் தொடர்பான செய்திகள் அடங்கிய சிலாங்கூர் கினி பத்திரிகை மறுநாள் வெளியிடப்படும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் பொது மக்களின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இதன் தொடர்பான கேள்விகள் சிலாங்கூர் மாநில அரசு கருவூலத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இடம் பெற்றன.

இந்த வரவு செலவுத் திட்டத் தாக்கலைத் தொடர்ந்து வரும் நவம்பர் 24ஆம் தேதி வரை வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெறும் என்று சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங் சான் கூறியிருந்தார்.


Pengarang :