Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari (tengah) bergambar bersama sukarelawan selepas Sesi Hi-Tea Kursus Kesiagaan Skuad Bencana Team Selangor di Taman Seri Muda, Shah Alam pada 4 November 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பொது தற்காப்பு படையில் 2,000 உறுப்பினர்களைச் சேர்க்க டீம் சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், நவ 5- மாநிலத்தில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்காக 2,000 உறுப்பினர்களை பொது தற்காப்பு படையில் (ஏ.பி.எம்.) சேர்க்க டீம் சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு தரம் உயர்த்துவதன் மூலம் தொடக்கக் கட்ட தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் டீம் சிலாங்கூர் உறுப்பினர் ஈடுபடுதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று டீம் சிலாங்கூர் நடவடிக்கை பிரிவுத் தலைவர் சைடினா சுபியான் கூறினார்.

Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari menyampaikan cenderhati kepada sukrelawan ketika Sesi Hi-Tea Kursus Kesiagaan Skuad Bencana Team Selangor di Taman Seri Muda, Shah Alam pada 4 November 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

தற்போது டீம் சிலாங்கூர் வசம் மாநிலம் முழுவதும் 25,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 2,000 பேரை ஏ.பி.எம். படையில் இணைவதற்கு  இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.

அவர்களுக்கு பேரிடரை எதிர்கொள்வது தொடர்பான பயிற்சிகளும்  நுணுக்கங்களும் கற்றுத் தரப்படும். இதன் மூலம் தன்னார்வலர்களுக்கான தரத்தை அவர்கள் உயர்த்திக் கொள்ள இயலும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா அஸாலியா மண்டபத்தில் டீம் சிலாங்கூர்  பேரிடர் மீட்புக் குழுவினருடனான தேநீர் விருந்து நிகழ்வில் அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்றார்.

ஏ.பி.எம். படையினருடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட 50 டீம் சிலாங்கூர் உறுப்பினர்களுக்கும் மந்திரி புசார் இந்நிகழ்வில் ஏ.பி.எம். அடையாள எண்களை வழங்கினார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த டீம் சிலாங்கூர் தன்னார்வலர் குழு மாநிலத்தில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்களின் போது களமிறங்கி பணியாற்றியுள்ளது.


Pengarang :