ECONOMYMEDIA STATEMENT

பாலஸ்தீன உள்ளடக்கங்கள் நீக்கம்- டிக்டாக், மேட்டா பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஃபாஹ்மி சந்திப்பு

கோலாலம்பூர், நவ 10-  உள்ளடக்க ஒழுங்குமுறை குறித்து விவாதிப்பதற்காக சமூக ஊடக தள வழங்குநர்களான டிக்டாக் மற்றும் மேட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகளை தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் நேற்று சந்தித்தார்.

பாலஸ்தீனம் தொடர்பான உள்ளடக்கம் டிக்டாக்கிலிருந்து  அகற்றப்பட்டது, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் இணையத் தளங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகத்தன்மையற்ற நடத்தை (சிஐ.பி)  ஆகியவை விவாதிக்கப்பட்ட  விஷயங்களில் அடங்கும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரண்டு தளங்கள் சம்பந்தப்பட்ட பல புகார்கள் மற்றும் முக்கிய விவகாரங்களை எழுப்பினேன்.
அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க டிக்டாக் மற்றும் மேட்டாவைக் வலியுறுத்தினேன் என்று அவர் தெரிவித்தார் .

எழுப்பப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதில் முழு ஒத்துழைப்பை வழங்க அவ்விரு சமூக ஊடகத் தளங்களும் உறுதி அளித்துள்ளன என்று அவர் கூறினார்.

பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் தொடர்பான உள்ளடக்கத்தை மலேசியாவில் இருந்து டிக்டாக் அகற்றியதற்கான ஆதாரங்களும் பயனீட்டாளர்களின்  புகார்களும் இருப்பதாக ஃபாஹ்மி முன்னதாகத்  தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, டிக்டாக் மற்றும் மேட்டாவுக்கு வலுவான எச்சரிக்கையை வழங்குமாறு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு (எம்சிஎம்சி) அவர் உத்தரவிட்டார். மேலும் இந்த பிரச்சனைப் பற்றி விவாதிக்க சமூக ஊடக தள நடத்துநர்களுடன் சந்திப்பையும் அவர் நடத்தினார்.


Pengarang :