乌鲁冷岳钟卡森林休闲公园度假村(Taman Eko Rimba Chongkak Park Resort)
ECONOMYMEDIA STATEMENT

யுனெஸ்கோவால் கோம்பாக்-உலு லங்காட் ஜியோ பார்க் அங்கீகரிக்கப்பட 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

ஷா ஆலம்,  நவ 10: கோம்பாக்-உலு லங்காட் (இயற்கை காடுகள் பாதுகாப்பு திட்டம்) ஜியோ பார்க்கை 2027ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனெஸ்கோ) உலகளாவிய புவிசார் பூங்காவாக அங்கீகரிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அறிவியல் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புவிச் சுற்றுலா ஆகியவற்றிற்கு   டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்தார்.

“கோம்பாக்-உலு லங்காட் ஜியோ பார்க் நாட்டின் ஏழாவது புவிசார் பூங்காவாகவும், சிலாங்கூரில் முதல் தேசிய புவிசார் பூங்காவாகவும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது” என்று அவர் நேற்று 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்த போது கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் மாட்சிமை மிக்க சுல்தானின் தேசிய அளவில் ஜியோ பார்க்கின் அங்கீகாரம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் என்றார்.

புவியியல், கலாச்சாரம் மற்றும் உயிரியல் பாரம் பரியத்தைப் பாதுகாப்பதோடு, மக்களின் நல்வாழ்வுக்கும், நிலையான வளர்ச்சியின் இலக்குக்கும் இது உத்தரவாதம் அளிக்கிறது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார்.


Pengarang :