ECONOMYMEDIA STATEMENTNATIONAL

 விமான சேவை நேரம் தவறினால்  –  நிறுவனங்கள் மீது நடவடிக்கை 

ஷா ஆலம், 16 நவ.: பயனாளர்களுக்கு  அட்டவணைப்படி   விமான  சேவைகளை விமான நிறுவனங்கள் வழங்குவதை  அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

விமானப் பயனர் அட்டவணையை , விமான நிறுவனங்கள் பின்பற்றத் தவறினால், மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

“பல காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், உதாரணமாக வானிலை நன்றாக இல்லை, விமானம் பழுது போன்றவையாக இருக்கும். எனவே விமான நிறுவனங்கள் வேண்டுமென்றே தங்கள் விமானங்களை தாமதப்படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

“குறித்த நேரத்தில்  இலக்கை எவ்வாறு  அடைவது  என்பது குறித்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதில்  உள்ள  சிக்கல்களை கையாளும்  வழிமுறைகளை  நாங்கள் கண்டுபிடிப்போம். தக்க காரணமின்றி  சரியான நேரத்தில் விமானம்  புறப்பட தவறினால் , நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இன்று  டேவான் ராக்யாட்டில் நடைபெற்ற அமைச்சரவை கேள்வி அமர்வில் சிபு நாடாளுமன்ற உறுப்பினர் ஒஸ்கார் லிங் சாய் இயூவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விமான தாமதங்களும், ரத்துகளும் தொடராமல் இருக்க சில மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை லோக் ஒப்புக்கொண்டார்.

“விமான நிறுவனங்கள் மட்டுமின்றி விமான நிலையமும் மேம்படுத்தப்பட வேண்டிய  வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.


Pengarang :