ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விமானத்தின் திறன் அதிகரிக்கப்பட்டால் விமான டிக்கெட்டுகள் விலை மேலும் கட்டுப்படுத்தப்படும்

ஷா ஆலம், நவ.16:  விமான நிறுவனங்களின்  பயனர்கள்  எண்ணிக்கை  அதிகரித்தால் விமான டிக்கெட்  விலையை கட்டுப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

இந்த  நடவடிக்கையின் மூலம், விமான டிக்கெட்டுகள்  விலை சம நிலையில் இருக்கும் என்று அந்தோனி லோக் விளக்கினார்.”மொத்த விமானத்தின்  பயனர்களின்  80 சதவீதம் மட்டுமே ஆகும். எனவே, அடுத்த சில மாதங்களுக்குள், பயண ஆற்றலை அதிகரிக்க  செயல்பாடுகள் அதிகரிக்கும் முயற்சி உள்ளது.

இன்று  டேவான் ராக்யாட்டில் அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மானின் (பிஎன்- குவாலக் கரை) கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிக  மேம்பாடுகள், அதிக பயனர்கள், அதிக  பயணங்களும் நாம்  எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், விமான டிக்கெட்டுகள் விலையானது அமெரிக்காவின் நாணயத்தின் அதிகரிப்பு, எண்ணெய் மற்றும் விமான வாடகை விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்று விளக்கினார் அவர்.


Pengarang :